Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

அவள்...!






மின்னொளியாய் முதுச்சிரிப்பும்
மயிலிரகாய் மணிக்கண்ணும்
அன்பிலெனை ஆரத் தழுவும்
என் அவள் தங்கை

இருக்கிறததுனக்கோர் இதயமென 
காதலினால் என்னை வருடி
காற்றிலென்னை மிதக்கவைக்கும்
என் அவள் காதலி

ஊரைவிட்டு உறவைவிட்டு
உன்னிளொரு பாதி நானென
என்றும் என்னைச் சுமக்கும்
என் அவள் மனைவி

உயிரை ஊனாக்கி உருகொடுத்து
நொடிப்பொழுதும் எனை நினைக்கும்
வணங்கமறந்த தெய்வமவள் தாய்

உருவம் ஓராயிரம் இங்குனக்கு 
பூவுலகின் பொக்கிஷமே
உயிரனத்தின் உயிரோட்டம் நீயன்றோ ?

என்றும் என்னவளே 
மண்ணுலகின் உயிரவளே பெண்!


ஏன் என்னாச்சு எனக்கு



அரக்கப் பறக்க எழுந்திருச்சு
அவசரமாய் குளித்துவிட்டு
பேக் ஒன்ன தூக்கிக்கிட்டே
கிளம்பிடுறேன் ஆபீஸுக்கு

பால்காரானும் பேப்பபர்காரனும்
பாக்குரானே என்ன
பரிதாபமாய்

தட்டித்தட்டி தேஞ்சுபோச்சு
கீ போர்டு
ஆனா தீந்துவிட மறுக்குது
என் வேல மட்டும்

ஒய்யாரிகளுக்கும் சிங்காரிகளுக்கும்
துப்பட்டா வெல்லம்
வழக்கொழிஞ்சு போயிருச்சு
சுடிதரெல்லாம்
அழிஞ்சுவரும் இனம் ஆயிடுச்சு

ஸைட் அடித்த பிகரெல்லம்
செட்டில் ஆயிட்டாங்க
சுட்டிப் பசங்களெல்லாம் என்ன
ஆங்கிலுன்னு கூப்பிடுறாங்க

ஊருபக்கம் போயிருந்தேன்
உத்தியோகமெல்லாம் எப்படினாங்க
ஒஸ்தியின்னு சொல்லிக்கிட்டே
சிறுச்சுகிட்டேன் உள்ளுக்குள்ளே

நூலருந்த காத்தாடியாய்
திக்கின்றி திரியிறேனே
ஏதேதோ ஆயிடிச்சு எனக்கு.


தனிமையின் துணைவன்


இதுவரை இல்லை
எனக்கொருத்தி

காதலெல்லாம் எனக்கு
காகிதத்தில் தான்
அவளைக் காணும் வரையில்

எங்கிருந்து வந்தாள்
எனையென்ன செய்தாள்

காதலுக்கு கண்ணில்லை
செவியுண்டு
செல் போனில் காதலித்தோம்

இரவென்றால் இத்தனை
இனிமையா..?
நீ பேசும் வார்த்தைகள்
பகலெல்லாம் எதிரொலியாய்

உன் குரல் இனிமையில்
இமைக்கின்றதோ நட்சத்திரங்கள்
மேகங்கள் தாங்கிவரும்
உன் நினைவுகள்

காதலியை காணவொரு
வரம் வாய்க்கலயோ
காத்திருந்தேன் கானல் நிலமாய்

கண்டுவிட்டேன் கன்னியவளை

அழகுக்கு அகராதி அவளோ..?

பூத்துக் குலுங்கும் மலர்களெல்லாம்
ஏங்குமுன் புன்னகைக்கு

நீ கொஞ்சும் வார்த்தையெல்லாம்
வீசுகிறது
மாலைத் தென்றலாய்

எத்தனை நான்
இழந்துவிட்டேன்
இத்தனை நாள்
உன்னை விட்டுவிட்டு

கடவுள் ஏன் கைவிட்டுவிட்டான்
உன்னை நான்
கரம்பிடிக்கும் நாளில்

உன்மேல் அவனுக்கு
அவ்வளவு பிரியமோ
ஏன் எடுத்துக்கொண்டான்
என்னிடமிருந்து..?

நீ மறைந்தாய்
நான் பிழைத்தேன்
அதனால்
நான் இறந்தேன் நித்தமும்

இரவெல்லாம் நரகமாய்
உன் நினைவுகள்
சுமந்த மேகங்கள்
சோகங்களாய்



அழுவதற்குத்தான் இன்று
இரவுகள்
நினைவுகள் தாங்கிய
நடைபிணமாய் நான்

உன்னைத் தொலைத்து
நம் காதலை நினைத்து
என்றும்
தனிமைக்கே துணையானேன்

அன்புள்ள மகனுக்கு அம்மா எழுதிக் கொள்வது





தங்கம் என்ன வைரம் என்ன
எது வேணும் எனக்கு
செல்லமே நீயிருக்க

எத்தனை ஆயிரம்
தவம் கண்டேன்
பிள்ளையாய் உன்னை நான்
பெத்தெடுக்க

பிஞ்சுக் கையில்
பக்குவமாய் நகம் கடித்து
பஞ்சு மேனி மடியில் வைத்து
நான் வளர்த்தேன்

சொர்க்கமெது பார்த்ததில்லை
கேட்டிருக்கிறேன்
அரை குறை மழலையில்
அம்மாவென நீ அழைக்க

தத்தித் தத்தி நீ நடக்க
தவறி எங்கும் விழுந்துவிட்டால்
தாங்காதிந்த தாயின் நெஞ்சம்

காலம் பல கடந்தாலென்ன
என்றும் குழந்தை தான்
நீ எனக்கு

வேலையென வீடுவிட்டு
தேசம் தாண்டி எங்கு
நீ சென்றாலும்
என்றும் உன்னை எண்ணி
ஏங்கும்
நெஞ்சமொன்னு இங்கிருக்கு.

தப்புத் தாளம்




பூமியாய் நீ சுடுவதால்
வானமாய் நான் அழுகிறேன்
என் கண்ணீரில் நீ குளிர்வாய் என்றால்
என்றும் அழுவேன் அடை மழையாய்


♥ ♥ ♥      ♥ ♥ ♥      ♥ ♥ ♥     ♥ ♥ ♥    ♥ ♥ ♥    ♥ ♥ ♥


என் காதலும்
உன் நிழல் போலத்தான்
என்றும் உன்னைத் தொடரும்
உனக்குத் தெரியாமல்



♥ ♥ ♥      ♥ ♥ ♥      ♥ ♥ ♥     ♥ ♥ ♥    ♥ ♥ ♥    ♥ ♥ ♥


அழுது அழுது பாலைவனமாகி விட்டது என் நெஞ்சம்
கானல் நீராய் அதில் உன் நினைவுகள் மட்டும்


♥ ♥ ♥      ♥ ♥ ♥      ♥ ♥ ♥     ♥ ♥ ♥    ♥ ♥ ♥    ♥ ♥ ♥


என் கண்ணீரும் உன்னைத் தான் காதலிக்கிறதோ..?
நீ என்னைப் பிரிந்தால் அது கண்ணை விட்டு
உன்னைத் தொடர்கிறது...!
அதற்கும் காதல் தோல்வி தான்... என்னைப் போல்
உன்னைச் சேராமல் மண்ணில் மறைகிறது.



♥ ♥ ♥      ♥ ♥ ♥      ♥ ♥ ♥     ♥ ♥ ♥    ♥ ♥ ♥    ♥ ♥ ♥


ஒருதலையென்றாலும் காதல்தான்


மங்கிய மாலைப்பொழுது
வானமெலாம் வண்ணமாய்
தவழ்ந்து வந்த குளிற்காற்று

மஞ்சள் மாலையில் முழுமதியோ..!

பார்வையால் என்னைப் புரட்டிப்போட்டு
புயலாய்ச் சென்றாள்

கண்டதும் காதல் இதுதானோ
என் மனமெல்லாம் மௌனராகம்

மின்னலாய் மறைந்து போனாள்
நினைவுகள் மட்டும்
மீதிவைத்துவிட்டு

எங்கே போனாள் என்னவானாள்
கேள்விகள் மட்டும் தொடர்கதையாய்

பழகிப்போன அதே கல்லூரி
புதுமுகமாய் அவள் அங்கே..!

என்னடா..! என்றிருந்த கல்லூரி
இன்று எழில்புரமாய்

மெல்லமாய் பின்தொடர்ந்தேன்
பின்தொடர்வதே வேலையானேன்

அவள் சின்னஞ்சிறு சிரிப்பால்
செத்துவிடுகிறேன் நானும்

சொல்லத்தான் தெரியவில்லை
என்னுள் இருந்த காதலை

இரவுகளெல்லாம் கனவுகளாய்
கனவுகளெல்லாம் உன் நினைவுகளாய்

உன்னிடம் பேச மட்டும்
வார்த்தை வற்றிப் போகிறதெனக்கு

முடியாது என்ற சொல்லுக்கு அஞ்சி
முடங்கிப்போகிறேன் நானும்

முள்ளாய்க் குத்தும் வார்த்தைகளை விட
மௌனமாய் இருக்கும் நினைவுகள் மேல்

என்றும் உன்னைப் பார்க்கிறேன்
என்றாவது என் காதலை
சொல்லிவிடுவேன் என்று

அரை நொடியில் வந்த காதலை
ஆயிரம் முறை யோசித்தும்
சொல்லத் தெரியவில்லை எனக்கு

புரிந்துகொள் பெண்ணே
ஒருதலையென்றாலும் காதல்தான்

தூரத்து சொந்தம்





8 மணி தாண்டி சூரியன் சுட்டாலும்
மெல்லமாய் முகத்தை மூடிக்கொண்டு
தொடரும் காலைத் தூக்கம்

" இன்னும் என்னடா தூக்கம் ? '
அதட்டியபடி அப்பாவின் குரல்

" தூங்கிட்டு போறான் விடுங்க "
என்றும் ஆதரவாய் அம்மா

காலைகள் தொடங்கும் முதல் மொழி
" காபியா டீயா கண்ணு "
காலங்கள் மாறினாலும்
கனிவு மாறாத அம்மாவின் கேள்வி

நான் விழித்ததை எப்படியோ கண்டுகொண்டு
முகமெல்லாம் புன்னகையாய்
கையில் Coffeeயுடன்

என்னதான் மாயமோ..?
எப்படித்தான் கூடுகிறதோ..?
என் அம்மாவின் Coffee சுவை மட்டும்

குடித்த சுவை மரப்பதற்குள்
மடித்த paperஐ நீட்டி
" படிப்பா " என்கிற அப்பா

மெலிதாய் paperஐ புரட்ட
" சேனாலை மாத்து அண்ணா.. "
என Remote க்கு சண்டை போடும் தம்பி

" அடிச்சுக்காதீங்க சாமி

" என
பேரன்களை பக்குவமாய்
சமாதானம் செய்யும் பாட்டி

இவை அனைத்தும் விட்டுவிட்டு
மைல்கள் தாண்டி
சில சொற்ப ஆயிரங்களுக்காக
கணினியுடன் குடும்பம் நடத்தும் நான்
என் குடும்பதிற்கே ஆனேன்
தூரத்து சொந்தம்.