இதுவரை இல்லை
எனக்கொருத்தி
காதலெல்லாம் எனக்கு
காகிதத்தில் தான்
அவளைக் காணும் வரையில்
எங்கிருந்து வந்தாள்
எனையென்ன செய்தாள்
காதலுக்கு கண்ணில்லை
செவியுண்டு
செல் போனில் காதலித்தோம்
இரவென்றால் இத்தனை
இனிமையா..?
நீ பேசும் வார்த்தைகள்
பகலெல்லாம் எதிரொலியாய்
உன் குரல் இனிமையில்
இமைக்கின்றதோ நட்சத்திரங்கள்
மேகங்கள் தாங்கிவரும்
உன் நினைவுகள்
காதலியை காணவொரு
வரம் வாய்க்கலயோ
காத்திருந்தேன் கானல் நிலமாய்
கண்டுவிட்டேன் கன்னியவளை
அழகுக்கு அகராதி அவளோ..?
பூத்துக் குலுங்கும் மலர்களெல்லாம்
ஏங்குமுன் புன்னகைக்கு
நீ கொஞ்சும் வார்த்தையெல்லாம்
வீசுகிறது
மாலைத் தென்றலாய்
எத்தனை நான்
இழந்துவிட்டேன்
இத்தனை நாள்
உன்னை விட்டுவிட்டு
கடவுள் ஏன் கைவிட்டுவிட்டான்
உன்னை நான்
கரம்பிடிக்கும் நாளில்
உன்மேல் அவனுக்கு
அவ்வளவு பிரியமோ
ஏன் எடுத்துக்கொண்டான்
என்னிடமிருந்து..?
நீ மறைந்தாய்
நான் பிழைத்தேன்
அதனால்
நான் இறந்தேன் நித்தமும்
இரவெல்லாம் நரகமாய்
உன் நினைவுகள்
சுமந்த மேகங்கள்
சோகங்களாய்
அழுவதற்குத்தான் இன்று
இரவுகள்
நினைவுகள் தாங்கிய
நடைபிணமாய் நான்
உன்னைத் தொலைத்து
நம் காதலை நினைத்து
என்றும்
தனிமைக்கே துணையானேன்
I Too Had A Love Story என்ற புத்தகத்தை தழுவி எழுதியது
ReplyDeleteநல்லா இருக்கு அண்ணா .. வாழ்த்துகள் .,
ReplyDelete