தங்கம் என்ன வைரம் என்ன
எது வேணும் எனக்கு
செல்லமே நீயிருக்க
எத்தனை ஆயிரம்
தவம் கண்டேன்
பிள்ளையாய் உன்னை நான்
பெத்தெடுக்க
பிஞ்சுக் கையில்
பக்குவமாய் நகம் கடித்து
பஞ்சு மேனி மடியில் வைத்து
நான் வளர்த்தேன்
சொர்க்கமெது பார்த்ததில்லை
கேட்டிருக்கிறேன்
அரை குறை மழலையில்
அம்மாவென நீ அழைக்க
தத்தித் தத்தி நீ நடக்க
தவறி எங்கும் விழுந்துவிட்டால்
தாங்காதிந்த தாயின் நெஞ்சம்
காலம் பல கடந்தாலென்ன
என்றும் குழந்தை தான்
நீ எனக்கு
வேலையென வீடுவிட்டு
தேசம் தாண்டி எங்கு
நீ சென்றாலும்
என்றும் உன்னை எண்ணி
ஏங்கும்
நெஞ்சமொன்னு இங்கிருக்கு.
sooper boss
ReplyDeleteஒரு தாயின் உள்ளுணர்வை அருமையாகப் படம்
ReplyDeleteபிடித்துள்ளது உங்கள் கவிதை .வாழ்த்துக்கள் சகோ
மென்மேலும் வளம்பெற .மிக்க நன்றி பகிர்வுக்கு .............