தூரத்து சொந்தம்





8 மணி தாண்டி சூரியன் சுட்டாலும்
மெல்லமாய் முகத்தை மூடிக்கொண்டு
தொடரும் காலைத் தூக்கம்

" இன்னும் என்னடா தூக்கம் ? '
அதட்டியபடி அப்பாவின் குரல்

" தூங்கிட்டு போறான் விடுங்க "
என்றும் ஆதரவாய் அம்மா

காலைகள் தொடங்கும் முதல் மொழி
" காபியா டீயா கண்ணு "
காலங்கள் மாறினாலும்
கனிவு மாறாத அம்மாவின் கேள்வி

நான் விழித்ததை எப்படியோ கண்டுகொண்டு
முகமெல்லாம் புன்னகையாய்
கையில் Coffeeயுடன்

என்னதான் மாயமோ..?
எப்படித்தான் கூடுகிறதோ..?
என் அம்மாவின் Coffee சுவை மட்டும்

குடித்த சுவை மரப்பதற்குள்
மடித்த paperஐ நீட்டி
" படிப்பா " என்கிற அப்பா

மெலிதாய் paperஐ புரட்ட
" சேனாலை மாத்து அண்ணா.. "
என Remote க்கு சண்டை போடும் தம்பி

" அடிச்சுக்காதீங்க சாமி

" என
பேரன்களை பக்குவமாய்
சமாதானம் செய்யும் பாட்டி

இவை அனைத்தும் விட்டுவிட்டு
மைல்கள் தாண்டி
சில சொற்ப ஆயிரங்களுக்காக
கணினியுடன் குடும்பம் நடத்தும் நான்
என் குடும்பதிற்கே ஆனேன்
தூரத்து சொந்தம்.

2 comments:

  1. செம டா ! எங்கடா இருந்த இவ்ளோ நாளா ???

    ReplyDelete
  2. எல்லாம் உன்கிட்ட கத்துக்கிட்டது தான்...

    ReplyDelete