ஒருதலையென்றாலும் காதல்தான்


மங்கிய மாலைப்பொழுது
வானமெலாம் வண்ணமாய்
தவழ்ந்து வந்த குளிற்காற்று

மஞ்சள் மாலையில் முழுமதியோ..!

பார்வையால் என்னைப் புரட்டிப்போட்டு
புயலாய்ச் சென்றாள்

கண்டதும் காதல் இதுதானோ
என் மனமெல்லாம் மௌனராகம்

மின்னலாய் மறைந்து போனாள்
நினைவுகள் மட்டும்
மீதிவைத்துவிட்டு

எங்கே போனாள் என்னவானாள்
கேள்விகள் மட்டும் தொடர்கதையாய்

பழகிப்போன அதே கல்லூரி
புதுமுகமாய் அவள் அங்கே..!

என்னடா..! என்றிருந்த கல்லூரி
இன்று எழில்புரமாய்

மெல்லமாய் பின்தொடர்ந்தேன்
பின்தொடர்வதே வேலையானேன்

அவள் சின்னஞ்சிறு சிரிப்பால்
செத்துவிடுகிறேன் நானும்

சொல்லத்தான் தெரியவில்லை
என்னுள் இருந்த காதலை

இரவுகளெல்லாம் கனவுகளாய்
கனவுகளெல்லாம் உன் நினைவுகளாய்

உன்னிடம் பேச மட்டும்
வார்த்தை வற்றிப் போகிறதெனக்கு

முடியாது என்ற சொல்லுக்கு அஞ்சி
முடங்கிப்போகிறேன் நானும்

முள்ளாய்க் குத்தும் வார்த்தைகளை விட
மௌனமாய் இருக்கும் நினைவுகள் மேல்

என்றும் உன்னைப் பார்க்கிறேன்
என்றாவது என் காதலை
சொல்லிவிடுவேன் என்று

அரை நொடியில் வந்த காதலை
ஆயிரம் முறை யோசித்தும்
சொல்லத் தெரியவில்லை எனக்கு

புரிந்துகொள் பெண்ணே
ஒருதலையென்றாலும் காதல்தான்

No comments:

Post a Comment