எங்கே அவள்


தமிழினத்தின் குலவிளக்காய் 
போற்றி வணங்கும் தெய்வமாய் 
இருந்தவளே 

ஏனிந்த மாசுற்ற  மாற்றமடி ?

மல்லிகையெல்லம் மறந்தாயடி 
சூடிக்கொள்ள மன்றாடுதடி 

பட்டு சேலையெல்லாம் பறந்தோடியது 
இன்று உன் 
அரை குறை ஆடைகள் 
அழகைத் தாண்டி அங்கம் காட்டுது 

மஞ்சள் குங்குமமும் மிஞ்சவில்லை 
மேக் அப் போடும் காலத்தினிலே 

இயற்கை மனம் மறைந்ததடி 
காற்றில் பறக்கும் உன் 
கூந்தலிலே 

ஜீன்சு பேன்ட்ம் ஸ்லீவ் லெஸ்ம் 
தான் சுதந்திரமோ ?
நாளைவரும் தலைமுறைகள் 
திண்டாடிடுமே 

நாகரிகத்தின் நகருதலிலே 
தொலைத்துவிட்டேன் என் 
தமிழச்சியை !


அட !என்னைக் கவிஞனாக்கியதும் காதல் 
குடி மகனாக்கியதும்
காதல் !