தப்புத் தாளம்
பூமியாய் நீ சுடுவதால்
வானமாய் நான் அழுகிறேன்
என் கண்ணீரில் நீ குளிர்வாய் என்றால்
என்றும் அழுவேன் அடை மழையாய்


♥ ♥ ♥      ♥ ♥ ♥      ♥ ♥ ♥     ♥ ♥ ♥    ♥ ♥ ♥    ♥ ♥ ♥


ன் காதலும்
உன் நிழல் போலத்தான்
என்றும் உன்னைத் தொடரும்
உனக்குத் தெரியாமல்♥ ♥ ♥      ♥ ♥ ♥      ♥ ♥ ♥     ♥ ♥ ♥    ♥ ♥ ♥    ♥ ♥ ♥


ழுது அழுது பாலைவனமாகி விட்டது என் நெஞ்சம்
கானல் நீராய் அதில் உன் நினைவுகள் மட்டும்


♥ ♥ ♥      ♥ ♥ ♥      ♥ ♥ ♥     ♥ ♥ ♥    ♥ ♥ ♥    ♥ ♥ ♥


ன் கண்ணீரும் உன்னைத் தான் காதலிக்கிறதோ..?
நீ என்னைப் பிரிந்தால் அது கண்ணை விட்டு
உன்னைத் தொடர்கிறது...!
அதற்கும் காதல் தோல்வி தான்... என்னைப் போல்
உன்னைச் சேராமல் மண்ணில் மறைகிறது.♥ ♥ ♥      ♥ ♥ ♥      ♥ ♥ ♥     ♥ ♥ ♥    ♥ ♥ ♥    ♥ ♥ ♥


No comments:

Post a Comment