அவள்...!


மின்னொளியாய் முதுச்சிரிப்பும்
மயிலிரகாய் மணிக்கண்ணும்
அன்பிலெனை ஆரத் தழுவும்
என் அவள் தங்கை

இருக்கிறததுனக்கோர் இதயமென 
காதலினால் என்னை வருடி
காற்றிலென்னை மிதக்கவைக்கும்
என் அவள் காதலி

ஊரைவிட்டு உறவைவிட்டு
உன்னிளொரு பாதி நானென
என்றும் என்னைச் சுமக்கும்
என் அவள் மனைவி

உயிரை ஊனாக்கி உருகொடுத்து
நொடிப்பொழுதும் எனை நினைக்கும்
வணங்கமறந்த தெய்வமவள் தாய்

உருவம் ஓராயிரம் இங்குனக்கு 
பூவுலகின் பொக்கிஷமே
உயிரனத்தின் உயிரோட்டம் நீயன்றோ ?

என்றும் என்னவளே 
மண்ணுலகின் உயிரவளே பெண்!


2 comments:

  1. ////உருவம் ஓராயிரம் இங்குனக்கு
    பூவுலகின் பொக்கிஷமே
    உயிரனத்தின் உயிரோட்டம் நீயன்றோ ?///

    அழகான வார்த்தைகள்...

    ReplyDelete