ஏன் என்னாச்சு எனக்கு



ரக்கப் பறக்க எழுந்திருச்சு
அவசரமாய் குளித்துவிட்டு
பேக் ஒன்ன தூக்கிக்கிட்டே
கிளம்பிடுறேன் ஆபீஸுக்கு

பால்காரானும் பேப்பபர்காரனும்
பாக்குரானே என்ன
பரிதாபமாய்

ட்டித்தட்டி தேஞ்சுபோச்சு
கீ போர்டு
ஆனா தீந்துவிட மறுக்குது
என் வேல மட்டும்

ய்யாரிகளுக்கும் சிங்காரிகளுக்கும்
துப்பட்டா வெல்லம்
வழக்கொழிஞ்சு போயிருச்சு
சுடிதரெல்லாம்
அழிஞ்சுவரும் இனம் ஆயிடுச்சு

ஸைட் அடித்த பிகரெல்லம்
செட்டில் ஆயிட்டாங்க
சுட்டிப் பசங்களெல்லாம் என்ன
ஆங்கிலுன்னு கூப்பிடுறாங்க

ருபக்கம் போயிருந்தேன்
உத்தியோகமெல்லாம் எப்படினாங்க
ஒஸ்தியின்னு சொல்லிக்கிட்டே
சிறுச்சுகிட்டேன் உள்ளுக்குள்ளே

நூலருந்த காத்தாடியாய்
திக்கின்றி திரியிறேனே
ஏதேதோ ஆயிடிச்சு எனக்கு.


1 comment:

  1. அட எனக்கும் பொருந்துதே!!!!

    ReplyDelete