என்னமோ ஏதோ




            கண் சிமிட்டாமால் கணினியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏனோ தெரியவில்லை. இது எங்கள் முதல் ஊடல். இன்றோடு திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. Computer ஏ கதி என வாழும் Software Engineer களில் நானும் ஒருவன்.
கை நிரய சம்பளம் கவலை இல்லாத வாழ்க்கை என்றிருந்த என் வாழ்வில் என் பெற்றோரல் எனக்கு கிடைத்த பொக்கிஷம் மஹா. அவளும் ஒரு பெரிய
நிறுவனத்தில் Software Engineer ஆகா வேலை செய்கிறாள். என் வாழ்க்கையில் இவ்வளவு சந்தோசத்தை  பார்த்தது இல்லை. பெற்றோரல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் எனக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். அவளுக்கும் அப்படித்தான்.
இனி என் வாழ்க்கை முழுவதும் அவளுக்குத்தான் என்று நினைத்தேன்.

ஆனால் நேற்று இரவு அவள் ஏன் என்னிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்க வேண்டும்.

நீங்க college la  யாரயாச்சும் என தயங்கிக்கொண்டே..... love பண்ணினீங்களா......? என்றாள்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது. இவ ஏன் இதையெல்லாம் கேக்குறா..?

நம்ம பழய friend எவனாச்சும் நம்பல பத்தி போட்டுக் கொடுத்துட்டானா...?

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. "இல்லை. நான் உத்தமன் " என்றாள் எவன் நம்பபோகிறான்.

ஆம். எனக்கும் ஒரு Flash back இருந்தது. நானும் ஜணனி என்ற பெண்ணும் கல்லூரி காலங்களில் ஒண்ணு மன்னாகத் திரிந்திருக்கிறோம்.
ஆனால் அவள் college முடிந்த உடன் அவள் அப்பா பார்த்து கட்டிவைத்த வெளிநாட்டு மாப்பிள்ளையை
 கட்டிக்கொண்டு US ல் செட்டில் ஆகிவிட்டாள்.
ஆனால் நான் இதை எப்படி மஹாவிடம் சொல்வது...? ஒரு வழியாக முழித்துக்கொண்டே இல்லை என தாலையாட்டினேன். அவளும் நம்பிவிட்டாள்.
தப்பித்துவிட்டோம் என நினைத்தேன். ஆனால் அவள் பதில் என்னை தூக்கிவாரிப்போட்டது.

ரமேஷ் என்றாள்.

( " என் பேர் அது இல்ல்லையே.... ! )  பின்பு தான் தெரிந்தது இது அவள் Flash back என்று.

இவளும் ஆ.... ச்சே.........

எவ்வளவு நாளாக.....? என்றேன்.

college final year ல் என்றாள். பின் ஏதோ பிரச்சனயில் பிரிந்துவிட்டோம் என சொல்லும் போதே அவள் கண்ணிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர்...... எனக்கு  என்ன செய்வது என்றே தெரியவில்லை.
அன்று இரவு அதற்கு மேல் நாங்கள் எதுவும் பேசவில்லை.
 காலையில் office வந்தவுடன் அவளிடம் இருந்து வரும் message வரவில்லை. Computer screen ஐ உற்று பார்த்துக்கொண்டிருந்தேன்....
நேற்று மஹா சொன்னது என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.


பின் வேண்டா வெறுப்பாக வேலையை செய்து கொண்டிருந்த போது...

" ..tweet...tweet............tweet ...tweet.......smsssssss..................."  என்றது.

எடுத்து பார்த்தேன் மஹா என்றிருந்தது.

"இனி என் வாழ்க்கையில் உங்களை விட முக்கியமான ஒருவர் வந்துவிட்டார்...."


எனக்கு பகீர் என்றிருந்தது. அதுக்குள்ளயா....? .

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

" என்னைவிடவா....... பிறகு நான்......:(  "  எங்கிருந்தோ வந்து sad smiley ஒட்டிக்கொண்டது.


Reply யை பார்த்ததும் அளவில்லாத சந்தோசம். அவளிடம் இருந்து வந்த message.........

  "He 'll call u DAD........:)...."




1 comment: